Hormuz| கொடூர ஏவுகணை தாக்குதல்.. 11 இந்தியர்களுக்கு நேர்ந்த பயங்கரம்
கொடூர ஏவுகணை தாக்குதல்.. 11 இந்தியர்களுக்கு நேர்ந்த பயங்கரம்
#hormuz #indianship
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 11 இந்திய மாலுமிகள் காயமடைந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பனாமா நாட்டின் கொடியுடன் சென்ற வணிக கப்பல் மீது ஏவுகணை தாக்கியதில், கப்பலில் இருந்த 11 இந்திய மாலுமிகள் காயமடைந்தனர். இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்து மாலுமிகள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக ஓமன் நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த இந்திய மாலுமிகளுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும், தூதரக ஆதரவையும் ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் விரைந்து வழங்கி வருவதாக வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்துள்ளது.
