``பணம் பெற்ற ஜெகன்’’ - ஆந்திர அரசியலில் பிரளயம்

x

மதுபான ஊழல் குற்றப்ப‌த்திரிகையில் ஜெகன் மோகன் ரெட்டி பெயர்

ஆந்திராவில், 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதுபான ஊழல் வழக்கு குற்றப்பத்திரிகையில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில், கடந்த 2019-2024ம் ஆண்டு வரையிலான ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், மதுபான விற்பனையில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், அமராவதி நீதிமன்றத்தில் 305 பக்க குற்றப்பத்திரிகையை ஆந்திர போலீசார் தாக்கல் செய்துள்ளனர். அதில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றவாளியாக சேர்க்கப்படாத நிலையில், மதுபான ஊழல் பணத்தை பெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும், குற்றப்பத்திரிகையில், மதுபான ஊழல் எப்படி நடந்தது? குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார்? என்ற விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டியை, ஆகஸ்ட் 1 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்