#BREAKING || மணிப்பூர் பாலியல் வன்கொடுமை.. அசாமுக்கு மாற்றி அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்

x

மணிப்பூர் பாலியல் வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் 21 வழக்குகளையும் அசாமுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

நியாயமான விசாரணையை உறுதி செய்ய பாதிக்கப்பட்டவர்களுக்கும், சாட்சிகளுக்கும் உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் வழக்கு விசாரணை

வழக்குகளை அண்டை மாநிலமான அசாமுக்கு மாற்ற வேண்டும் மணிப்பூர் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா யோசனை

சிபிஐ வழக்குகள் அசாமுக்கு மாற்றப்பட்டால் மொழி சிக்கல் ஏற்படும் என மனுதாரர்கள் தரப்பு ஆட்சேபம்

மணிப்பூர் பாலியல் வன்முறை தொடர்பாக, சிபிஐ விசாரித்து வரும் 21 வழக்குகளும் அசாமுக்கு மாற்றம் - உச்சநீதிமன்றம்

"மணிப்பூர் மாநிலத்தின் ஒன்று அல்லது 2 மொழிகளை தெரிந்த நீதிபதியை, கவுஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமிக்க வேண்டும்"

வழக்கில் தொடர்ப ுடைய குற்றம் சாட்டப்பட்டவர்களை காணொலி வாயிலாக ஆஜர்படுத்த அனுமதி

"நியாயமான விசாரணையை உறுதி செய்ய பாதிக்கப் பட்டவர்களுக்கும், சாட்சிகளுக்கும் உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும்"

மணிப்பூர் பாலியல் வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் 21 வழக்குகளையும் அசாமுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மணிப்பூர் மாநிலத்தில் சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஏதாவது ஒரு உள்ளூர் சமூகத்தை சார்ந்தவராக இருப்பார் என்பதாலும், குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதில் உள்ள சவால்களாலும், இந்த வழக்குகளை அண்டை மாநிலமான அசாமுக்கு மாற்ற வேண்டும் மணிப்பூர் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா யோசனை தெரிவித்தார்.

சிபிஐ வழக்குகள் அசாமுக்கு மாற்றப்பட்டால் மொழி சிக்கல் ஏற்படும் என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், மணிப்பூர் பாலியல் வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் 21 வழக்குகளும் அசாமுக்கு மாற்றப்படுகின்றன. இந்த வழக்குகளை விசாரிக்க மணிப்பூர் மாநிலத்தின் ஒன்ற அல்லது இரண்டு மொழிகளை தெரிந்த நீதிபதியை போகாத்தி உயர நீதிமன்ற தலைமை நீதிபதி நியமிக்க வேண்டும்

பாதுகாப்பு, தொலைவு காரணங்களால் இந்த வழக்குகள் தொடர்புடைய குற்றம் சாட்டப்பட்டவர்களை காணொலி வாயிலாக ஆஜர் படுத்தவும் அனுமதிக்கப்படுகிறது.

நியாயமான விசாரணையை உறுதி செய்ய பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்