BR Gavai Issue | தலைமை நீதிபதி மீது காலணி வீசி வக்கீல் சொன்ன திமிர் வார்த்தை
தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வக்கீல் சொன்ன திமிர் வார்த்தை
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய் மீது, காலணி வீச முயன்றதுக்கு தான் வருத்தப்படவில்லை என, வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூறியுள்ளார்.
சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் மீது, வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் காலணியை வீச முயன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
இது குறித்து பேசிய அவர், ஜவாரி கோயிலில் உள்ள, விஷ்ணு சிலையை மீட்டெடுக்கக் கோரிய பொதுநல மனுவை, தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், சிலையை மீட்டெடுக்க கடவுளிடமே சென்று பிரார்த்தனை செய்யுங்கள் எனக்கூறினார்.
மேலும், “அவர் நிவாரணம் வழங்க விரும்பவில்லை என்றாலும் குறைந்தபட்சம் கேலி செய்யாமலாவது இருந்திருக்கலாம் எனவும், என்னுடைய வினை அவருடைய செயல்பாடுகளுக்கு கொடுக்கப்பட்ட எதிர்வினைதான், இதற்காக தான் வருத்தப்படவில்லை“ என அவர் கூறியுள்ளார்.
