காதலி வீட்டில் காதலன் தற்கொலை...

சசிகுமார் வீட்டார் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காதலி வீட்டில் காதலன் தற்கொலை...
Published on
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அங்கல்லூ கிராமத்தை சேர்ந்த சசிகுமார், கம்மதிம்மபள்ளி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஐஸ்வர்யாவை காதலித்துள்ளார். இதையறிந்த இருவீட்டாரும், காதலர்களை பிரித்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காதலி வீட்டிற்கு சென்ற சசிகுமார், மாணவியை உடன் வருமாறு அழைத்ததாகத் தெரிகிறது. இதற்கு அவர் ஒத்துக்கொள்ளாததால், அவரது வீட்டில் சசிகுமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, சசிகுமார் வீட்டார் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com