காதலியை குத்திகொன்று காதலன் தற்கொலை.. திருமணத்திற்கு சம்மதிக்காததால் வெறிச்செயல்

காதலியை குத்திகொன்று காதலன் தற்கொலை.. திருமணத்திற்கு சம்மதிக்காததால்  வெறிச்செயல்
x
  • அந்தி சாய்ந்த மாலை வேளை அது.. வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தவர்கள், அவ்வழியாக சென்றவர்கள் என அனைவரும் கூட்டம் கூட்டமாக நின்று அங்கிருந்த அப்பார்மெண்டை வெறிக்க வெறிக்க பார்த்து கொண்டிருந்தனர்..
  • காரணம்.... அங்கு நடந்தேறிய ஒரு படு பயங்கரம்...
  • தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தடயவியல் அதிகாரிகளோடு வந்த போலீசார் அந்த அப்பார்மெண்டை கிரைம் ஸ்பாட்டாக மாற்றினார்கள்...
  • வீட்டின் உள்ளே இரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு விசாரணையை தொடங்கினார்கள்...
  • சடலமாக கிடந்தவர்கள் 29 வயதான பிரசாந்த்தும் 19 வயதான அவரது காதலி ஐஸ்வர்யாவும் தான்.. பிரசாந்த் ஒரு பெயிண்டர்.
  • இருவரும் கர்நாடகா பெலகாவி மாவட்டம் சகாப்புராவை அடுத்துள்ள நவஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள்... கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் ஒருவொருக்கொருவர் உயிருக்குயிராக காதலித்து வந்திருக்கிறார்கள்..
  • இந்த காதல் விவகாரம் ஒருகட்டத்தில் இரண்டு குடும்பத்துக்குமே தெரிய வந்திருக்கிறது. இதனால் பிரசாந்த் ஐஸ்வரியாவின் தாயிடம் சென்று மகளை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டிருக்கிறார்.
  • ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. வாழ்கையில் சம்பாதிச்சி செட்டிலான பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என அட்வைஸ் செய்திருக்கிறார்.
  • அந்த அறிவுரையை பிரசாந்த் கேட்பதாக இல்லை. காதலியிடம் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்ளலாம் என வற்புறுத்தியிருக்கிறார். ஆனால் ஐஸ்வரியா அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே பிரசாந்த் சென்றிருக்கிறார்.
  • உயிரோடு இருக்கும்போது தானே திருமணம் செய்து கொள்ள குடும்பத்தின் சம்மதம் தேவைப்படும் இறந்துவிட்டால் யாருடைய சம்மதம் இல்லாமல் சேர்ந்து வாழ்ந்து விடலாம் என பிரசாந்த் முடிவு செய்து இருக்கிறார்.
  • ஆனால் இந்த விஷயத்தை ஐஸ்வர்யாவுக்கு அவர் சொல்லவில்லை..
  • சம்பவத்தன்று ஐஸ்வர்யா சாகப்புராவில் உள்ள அவரது சித்தி வீட்டில் இருப்பதை தெரிந்து கொண்ட பிரசாந்த் விஷ பாட்டிலோடு அங்கு சென்று இருக்கிறார்.
  • வீட்டில் ஐஸ்வர்யாவை தவிர வேறு யாரும் இல்லை
  • பிரசாந்த் தனது தற்கொலை முடிவு ஐஸ்வர்யாவிடம் கூறியதும் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை..
  • அப்படி இருந்தும் பிரசாந்த் தனது முடிவை மாற்றிக் கொள்வதாக இல்லை கட்டாயப்படுத்தி காதலிக்கு விஷம் கொடுக்க முயன்றிருக்கிறார்...
  • ஆனால் ஐஸ்வர்யா அதற்கு இடம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த பிரசாந்த் வீட்டில் இருந்த கத்தியால் ஐஸ்வர்யாவின் கழுத்தை கரகரவென அறுத்து கொன்றுவிட்டு அதே கத்தியால் அவரும் குத்திக்கொண்டு தற்கொலை செய்திருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்