boy | missing கிருஷ்ணகிரியில் மாயம் பெங்களூருவில் மீட்புதொலைந்த சிறுவனின் சூப்பர் மூவ்!
கிருஷ்ணகிரியில் மாயம் பெங்களூருவில் மீட்புதொலைந்த சிறுவனின் சூப்பர் மூவ்! #boymissing #boy #krishnagiri #banglore கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே, தாய் திட்டியதால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய 15 வயது சிறுவனை போலீசார் பெங்களூரில் மீட்டனர்.குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷின் மகன் அஸ்வின், தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுவன் வீடு திரும்பாததால், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவன் திம்மாபுரம் நோக்கி நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், பெங்களூரு கே.ஆர். மார்க்கெட் பகுதியில் இருந்த சிறுவன், தனது பெற்றோரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் சிறுவனைப் பத்திரமாக மீட்டனர்.
