வெஜ் பிரியாணியில் எலும்பு..? அடுத்த பிளேட்டில் இருந்து அள்ளிப்போட்ட அடச்சீ பாய்ஸ்

x

சாப்பிட்ட உணவுக்கு பணம் தராமல் இருக்க சைவ பிரியாணியில் எலும்பு கலக்கப்பட்ட நிலையில், சிசிடிவி கேமராவால் இளைஞர்கள் சிக்கியுள்ளனர்...

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் அமைந்துள்ள உணவகத்திற்கு 13 இளைஞர்கள் சென்றுள்ளனர்... சிலர் சைவ பிரியாணியையும், சிலர் அசைவ பிரியாணியையும் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அசைவ பிரியாணி சாப்பிட்ட நண்பர்களின் பிளேட்டில் இருந்து சில எலும்பு துண்டுகளை எடுத்து தங்களது பிளேட்டில் உள்ள சைவ உணவில் கலந்த அவர்கள், புனிதமான மாதத்தில் சைவ உணவில் எலும்பு துண்டுகள் இருந்ததாகவும் தங்கள் மனம் புண்பட்டு இருப்பதாகவும் கூறி பணம் கொடுக்காமல் இருப்பதற்காக உணவக உரிமையாளரிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்... ஆனால் அவர்களின் விஷம செயலை சிசிடிவி கேமரா படம் போட்டுக் காட்டவே போலீசார் உதவியுடன் அந்த இளைஞர்கள் விரட்டப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்