பாலிவுட்டின் உச்ச நட்சத்திரத்திற்கே பாதுகாப்பில்லையா..?

x
  • படங்களில் ஹீரோக்கள் பறந்து பறந்து சண்டை போடுவதைப் பார்த்திருப்போம்... ஆனால் நிஜத்திலேயே பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான், தன் குடும்பத்தைத் திருடனிடமிருந்து காக்க போராடி சண்டையிட்டு கத்திக் குத்தும் வாங்கியது தான் சபாஷ் போட வைத்துள்ளது.. இது ஒருபுறமிருக்க... பாலிவுட்டின் உச்ச நட்சத்திரத்திற்கே பாதுகாப்பில்லையா?.. நடந்தது என்ன?
  • மும்பை பந்த்ராவில் உள்ள சைஃப் அலிகான் வீட்டுக்குள் நள்ளிரவில் பதுங்கி இருந்த திருடனைக் கண்டு அலறியுள்ளார் பணிப்பெண்.. என்ன ஆனதோ...ஏதானதோ...என மின்னல் வேகத்தில் அறையை விட்டு வெளியில் வந்துள்ளார் சைஃப்.. திருடனின் கையில் கத்தி இருக்கிறது...ஆனால் நிராயுதபாணியாய் நின்ற சைஃப் அலிகான்...கொஞ்சம் கூட பயப்படாமல் திருடனுடன் தைரியமாக சண்டையிட்டார்.. ஆனால் திருடன் கத்தியால் தாக்கவே...6 இடங்களில் கத்திக்குத்து.. முதுகுத் தண்டுக்கு மிக நெருக்கமாக ஒரு காயம்...கழுத்தில் பலத்த காயம்.. அறைக்குள் அடைத்து வைக்கப்பட்ட திருடன் எப்படியோ தப்பி விட்டான்.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சரிந்த சைஃப் அலிகான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டியதும் தான் அனைவருக்கும் நிம்மதி பெருமூச்சு வந்தது.. ஆனால் தீவிபத்து ஏற்பட்டால் வெளியேற உதவும் அவசர பாதை வழியாக திருடன் உள்ளே நுழைந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.. உள்ளே இருந்த யாரோதான் திருடனுக்கு உதவியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.. போலீசார் சைஃப் வீட்டில் வேலை பார்க்கும் அனைவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.. இன்னொரு பக்கம் கரீனா கபூர் இரவு பார்ட்டிக்கு சென்று விட்டு தாமதமாக வந்ததாகவும் கூறப்படுகிறது.. எது எப்படியாயினும் சைஃப் அலிகான் மீது நடத்தப்பட்ட கத்திக் குத்து தாக்குதலுக்கு திரையுலகின் உச்சநட்சத்திரங்களும், முக்கிய பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அதே சமயம், தன் குடும்பத்தைக் காக்க தன்னந்தனியாக போராடிய சைஃபின் வீரத்தையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.. ஏற்கனவே பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் உயிருக்குக் குறி வைக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது மற்றொரு பாலிவுட் உச்சநட்சத்திரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பாலிவுட்டை பரபரப்பாக்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்