ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து - 6 பேர் பலி - தெலுங்கானாவில் பரபரப்பு

ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து - 6 பேர் பலி - தெலுங்கானாவில் பரபரப்பு
Published on

ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து

6 பேர் பலி - 18 பேர் படுகாயம்

தெலுங்கானாவில் பரபரப்பு

#telangana #accident #fire #thanthitv

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், ரவி ஷர்மா என்பவருக்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் தமிழ்நாடு, பீகார் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், வேலை செய்து வருகின்றனர். நேற்று மாலை வழக்கம்போல தொழிற்சாலை இயங்கிக் கொண்டிந்தபோது, திடீரென பாய்லர் வெடித்துச் சிதறியது. அப்போது தொழிற்சாலையில் ஒரு பகுதி தரைமட்டமானதுடன், விபத்து நடந்த இடத்திற்கு அருகில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களில் 18 பேர் படுகாயமடைந்த நிலையில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவல் அறிந்து வந்த போலீசார், ஆம்புலன்ஸ் வாகனங்களை வரவழைத்து படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்தப் பகுதியே பரபரப்புக்கு உள்ளானது.

X

Thanthi TV
www.thanthitv.com