கருப்பு பூஞ்சை - புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அது குறித்து தற்போது பார்க்கலாம்.
கருப்பு பூஞ்சை - புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
Published on

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அது குறித்து தற்போது பார்க்கலாம்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட கூடியவர்கள் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு ஆளாகி வரும் நிலையில், இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு நோய் பாதித்தவருக்கு வழங்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து பல்வேறு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.

அதில் கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு பொதுவாக தலைவலி, லேசான காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்டவை இருப்பதாகவும்,

மூக்கு அடைப்பு, மூக்கை சுற்றி கருவலையம், ரத்த கசிவு உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாகவும்,

கண்களை பொறுத்தவரை கண் எரிச்சல், கண்கள் சிவந்து இருத்தல், பார்வை மங்குதல், கண்களில் இருந்து நீர் வடிதல் போன்ற பிரச்சினைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல் வலி ஏற்படுதல், பற்கள் விழுதல், வாய் பகுதி கருநிறமாதல் ,

நுரையீரல் பிரச்சினை போன்ற பல அறிகுறிகளும் கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

அதில் ஆம்போடெரிசின் வகை மருந்துகளை ஏற்று கொள்ளாத நோயாளிகளுக்கு பொசகோனசோல், இஸவுகோனசோல் மருந்துகளை பயன்படுத்தலாம் என்றும்

கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு 0 புள்ளி 75 முதல் 1 மில்லி கிராம் வரை ஆம்போடெரிசன் பி மருந்து வழங்கலாம் என்றும் அல்லது நாளொன்றுக்கு லிபோசோமல் ஆம்போடெரிசின் மருந்தை 5 முதல் 10 மில்லி கிராம் வரை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் பாதிப்பு தீவிரமாக இருந்தால் பொசகோனசோல் என்ற மருந்தை நாளொன்றுக்கு 300 மில்லி கிராம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட பிறகு படிப்படியாக மருந்துகளை வழங்க வேண்டும் என்றும் தொற்று பரவுகிறதா, சிறுநீர் பரிசோதனை போன்றவற்றை தொடர்ந்து கண்காணித்து மருந்துகளின் அளவை மாற்ற வேண்டும் என்றும்

ஆக்சிஜன் உதவியுடன் ஸ்டீராய்டு மூலம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இன்சுலின் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுத்தமான நீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும், ஆக்சிஜன் சிலிண்டர்களை முறையாக பராமரிக்க வேண்டும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளும் வழங்கப்பட்டன

X

Thanthi TV
www.thanthitv.com