திடீரென நின்ற கருப்பு கார்.. பள்ளி மாணவியை உள்ளே இழுத்து பயங்கரம்..பதறி ஓடி வந்த மக்களுக்கு ஷாக்!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கக்காடு பள்ளியில் பயின்று வரும் 15 வயது சிறுமி வழக்கம் போல் தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கருப்பு நிற காரில் இருந்த நான்கு பேர் திடீரென காரை நிறுத்தி சிறுமியை கடத்த முயற்சித்தனர். சிறுமி உடனடியாக அலறியதால், அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுமியை காப்பாற்றியுள்ளனர். இது குறித்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது சிறுமி கடத்தி செல்ல முற்படும் காட்சிகள் பதிவாகியிருந்தன. சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com