பா.ஜ.க. மாநில தலைவர்களிடம் வாஜ்பாய் அஸ்தி ஒப்படைப்பு

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி அஸ்தி அடங்கிய கலசங்களை, அந்தந்த மாநில பா.ஜ.க. தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
பா.ஜ.க. மாநில தலைவர்களிடம் வாஜ்பாய் அஸ்தி ஒப்படைப்பு
Published on
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி இறுதிச் சடங்குகள், கடந்த வெள்ளியன்று டெல்லியில் நடைபெற்றது. இதையடுத்து, அவரது அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள புனித நதிகளில், வாஜ்பாயி அஸ்தியை கரைக்க பா.ஜ.க. முடிவு செய்தது. அதன்படி, வாஜ்பாயி அஸ்தி அடங்கிய கலசங்களை, அந்தந்த மாநில பா.ஜ.க. தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com