

புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஆளுங்கட்சி எம்எல்ஏவின் ஊழல் புகார் குறித்து விவாதிக்க சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வலியுறுத்தி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் பாஜக எம்எல்ஏ-க்கள் மனு அளித்தனர். மேலும், ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ சாமிநாதன், ஊழல் புகாரில் சிக்கியுள்ள முதலமைச்சர் நாராயணசாமி, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.