``மகளிருக்கு மாதம் ரூ.2,500.. தீபாவளிக்கு இலவச சிலிண்டர்.. '' - ஒரேபோடாய் போட்ட பாஜக
ஆம் ஆத்மி கட்சி, காங்கிரசை தொடர்ந்து பெண்களை மையப்படுத்தி, அதிரடியான பல்வேறு தேர்தல் வாக்குறுதியை பாஜக வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 'சங்கல்ப் பத்திரம்' என்ற பெயரில் தேர்தல் வாக்குறுதியை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.
மகளிர் சம்ரிதி யோஜனா என்ற திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
ஏழை பெண்களுக்கு எரிவாயு சிலிண்டருக்கு 500 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகை ஒவ்வொன்றுக்கும் ஒரு எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.
கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், 21 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படும்.
பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 வாரத்தில் இருந்து 26 வாரமாக அதிகரிக்கப்படும்.
குடிசைப் பகுதிகளில் 'அடல் உணவகம்' தொடங்கி, 5 ரூபாய்க்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
