பிரியாணி, புலாவ்... அங்கன்வாடி புதிய உணவு வகைகள்
இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் அங்கன்வாடிக்கு செல்லும் மகன் ஷங்குவுக்கு, தாய் பிரியாணி ஊட்டிக்கொண்டிருந்தார். அப்போது, குழந்தை அங்கன்வாடிகளில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொறிச்ச கோழி தர வேண்டும் என, மழலை மொழியில் கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அதை கண்ட அமைச்சர் வீணா ஜார்ஜ், குழந்தையின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என பதிலளித்தார்.. அதன்படி, அங்கன்வாடி குழந்தைகளுக்கான உணவு மெனுவில் முட்டை பிரியாணி மற்றும் புலாவ் இடம்பெற்றுள்ளது. மேலும் 2 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்ட பால் மற்றும் முட்டைகள், 3 நாட்களுக்கு ஒரு முறை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Next Story
