"பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களை கொல்ல முன்னுரிமை" - பிபின் ராவத்

வன்முறையை பரப்பும் பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களை கொல்வதற்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாக முப்படை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்
"பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களை கொல்ல முன்னுரிமை" - பிபின் ராவத்
Published on

எட்டு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் பயரங்கரவாத அமைப்பின் தளபதி, ரியாஸ் நைகூ, பாதுகாப்பு படையினரால், நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முப்படை தளபதி பிபின் ராவத், பயங்கரவாத தலைவர்களை சுட்டுக் கொல்ல அதிக முன்னுரிமை அளிப்படுவதாக தெரிவித்துள்ளார். பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் தான் வன்முறையை பரப்புவதுடன், பொய் தகவல்களை கூறி, இளைய தலைமுறையினரை தவறாக வழிநடத்துகின்றனர் என்றும் அவர் கூறினார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பயங்கரவாத தலைவர்களை கொல்வதற்கு அதிக முன்னுரிமை கொடுத்து, பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய பிபின் ராவத், அவர்கள் கொல்லப்பட்டால், காஷ்மீர் பள்ளத்தாக்கில், தாமாகவே பயங்கரவாத அமைப்பில் சேர்பவர்களின் எண்ணிக்கையும், வன்முறையும் குறைந்து விடும் என்று தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com