நேருக்கு நேர் மோதிய பைக் கார்.. அந்தரத்தில் பறக்கும் திக் திக் காட்சி | Bike Accident

x

கேரளா, கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடக்கலில் காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர்கள் இருவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டாம் தேதி அதே பகுதியை சேர்ந்த மகேஷ் ,அபிஷேக் என்ற இரு இளைஞர்கள் பைக்கில் சென்றபோது எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதி தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் தற்போது திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்