மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசம் போலீசார் வலைவீச்சு
லக்னோவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசம் செய்த இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ பல்கலைக்கழக மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 12க்கும் மேற்பட்ட பைக்குகளில் சென்ற இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாகசம் செய்தனர். அதில் சில பைக்குகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்
Next Story
