சாலையில் தானாக ஓடிய பைக் - சுருண்டு விழுந்த இளைஞர்.. அதிர்ச்சி வீடியோ

x

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட சாஸ்தான்கோடு அருகே இளைஞர் விபத்தில் சிக்கிய நிலையில், இரு சக்கர வாகனம் மட்டும் தனியாக சாலையில் ஓடும் காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. சாஸ்தான்கோடு சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர், முன்னே சென்று கொண்டிருந்த காரை முந்திச் செல்ல முயற்சித்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி விழுந்த நிலையில், இரு சக்கர வாகனம் மட்டும் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு தானாக ஓடிச் சென்று சுவர் மீது மோதி விழுந்தது. தற்போது பாதிக்கப்பட்ட இளைஞருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்