Bihar | காது வலி சிகிச்சைக்கு சென்று கையை இழந்த இளம்பெண்
காது வலி சிகிச்சைக்கு சென்று கையை இழந்த இளம்பெண்
Bihar | காது வலி சிகிச்சைக்கு சென்று கையை இழந்த இளம்பெண்
பீகார் மாநிலம், ஷிவ்ஹார் பகுதியில் , காது வலிக்காக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற 20 வயது இளம்பெண்ணின் கை அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காது அறுவை சிகிச்சைக்குப் பிறகு, செவிலியர் தவறான இடத்தில் ஊசி செலுத்தியதால், அவரது கை பச்சை நிறமாக மாறி கடுமையான பாதிப்பு ஏற்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். தொடர்ந்து பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனின்றி, தொற்று தீவிரமடைந்ததால் முழங்கைக்கு மேல் கையை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
