Bihar | Rope Car | Rohtas | ரூ.13 கோடி திட்டம்.. சரிந்து விழுந்த ரோப் கார்.. பீகாரில் அதிர்ச்சி
பீகாரில், சோதனை ஓட்டத்தின்போது ரோப் கார், தூணோடு சரிந்து விழுந்தது.
ரோஹ்தாஸ் (rohtas) மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ரோஹ்தாஸ்கர் கோட்டை மற்றும் அருகிலுள்ள கோயில்களுக்குச் செல்வதை எளிதாக்கும் வகையில், 13 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 300 மீட்டர் நீளமுள்ள ரோப்வே (Ropeway) திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.
புத்தாண்டு தினத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்ட நிலையில், சோதனை ஓட்டத்தின்போது ஒரு கம்பி வடம் நழுவியதால் ரோப் காருக்கென அமைக்கப்பட்ட தூண் மற்றும் கோபுரம் சரிந்து விழுந்தது. இச்சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
Next Story
