Bihar Opinion Poll | Bihar Election | பீகார் தேர்தல் - NDA கூட்டணி ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 40 சதவீதம் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு உள்ளதாக, தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளதாக சி வோட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டமாக நவம்பர் 6 ,11ம் தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ம் தேதியும் நடக்க உள்ளது. பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள 40 சதவீத வாய்ப்பு இருப்பதாக, சி. வோட்டர் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் 38.3 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. பீகார் அரசியலில் புதிதாக நுழைந்த பிரசாந்த் கிஷோரின் ஜான் சுராஜ் 13.3 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு சற்று மாறுபட்ட முடிவு வெளியாகி உள்ளது. இதில் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவுக்கு, 36.20 சதவீதம் ஆதரவு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பிரசாந்த் கிஷோர் 23.2 சதவீத ஆதரவுடன் இரண்டாம் இடமும், நிதிஷ் குமார் 15.9% ஆதரவுடன் மூன்றாம் இடமும், சிராக் பாஸ்வான் 8.8% வாக்குகளுடன் நான்காம் இடத்தை பிடிப்பார் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
