Bihar Election | பிரச்சார அலை ஓய்ந்தது.. நாளை அனல் பறக்கும் 2ம் கட்ட தேர்தல்!
நாளை பீகாரில் 2ம் கட்ட தேர்தல் - தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது பீகாரில் இரண்டாம்கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக கடந்த நவம்பர் ஆறாம் தேதி 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. அதில் 65.09 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த நிலையில் , நாளை (நவம்பர் 11ஆம் தேதி) மீதமுள்ள 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று விறுவிறுப்பாக நடந்த நிலையில், மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
Next Story
