"இறந்த பிறகும் ஆறடி நிலத்திற்காக போராடியவர் கருணாநிதி" - திமுக எம்.பி. வில்சன்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 'பாரத் ரத்னா' விருது வழங்க வேண்டுமென மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.
"இறந்த பிறகும் ஆறடி நிலத்திற்காக போராடியவர் கருணாநிதி" - திமுக எம்.பி. வில்சன்
Published on

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 'பாரத் ரத்னா' விருது வழங்க வேண்டுமென மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களவையில் உரையாற்றிய அவர், திராவிட இயக்கக் கொள்கை தான், தமிழ்நாடு உயர்ந்த மாநிலங்களில் ஒன்றாக எழுவதற்குக் காரணமாக இருந்ததாக கூறினார். வாழ்நாள் முழுவதும், மட்டுமல்லாமல், இறந்த பிறகும் ஆறடி நிலத்திற்காக போராடிய முத்தமிழ் அறிஞர் கருணாநிதிக்கு, மத்திய அரசு விரைவில், 'பாரத ரத்னா' விருது வழங்கி கவுரவிக்கும் என நம்புவதாக தி.மு.க. எம்.பி. வில்சன் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com