புரட்டிப் போடப்பட்ட பெங்களூரு - மிதக்கும் பகுதிகள்.. தவிக்கும் மக்கள்
Bangalore Heavy Rain || புரட்டிப் போடப்பட்ட பெங்களூரு - மிதக்கும் பகுதிகள்.. தவிக்கும் மக்கள்
பெங்களூர் நகரில் பெய்த கனமழையின் காரணமாக நகரின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
நகரின் 20க்கும் மேற்பட்ட வார்டுகளில் 70 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்தது. நகரின் விஜயநகர், இந்திரா நகர், கோரமங்களா, எலக்ட்ரானிக் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்தது.
பல இடங்களில் சாலைகளில் 2 அடிக்கும் அதிகமாக வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
Next Story
