தேசத்தை உலுக்கிய பெங்களூரு குண்டுவெடிப்பு... பின்னணியில் SI வில்சன் கொலையாளிகளா..? - தமிழகத்தில் சல்லடைபோடும் NIA

x

பெங்களூரு உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தமிழ்நாட்டில் 5 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள உள்ள தனியார் உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது. குண்டு வைத்த நபர் அணிந்திருந்த தொப்பியின் குறியீட்டு எண்ணை வைத்து, சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் விசாரணை நடத்திய அதிகாரிகள், அதன் மூலம் குண்டு வைத்த நபர் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்ததையும் கண்டறிந்தனர். இதனிடையே, இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியது, கர்நாடகாவை சேர்ந்த முஷாவீர் உசேன் சாகிப் என தெரியவந்ததை அடுத்து, கர்நாடகாவில் அவரது வீடு உட்பட 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், தமிழகத்தில் சென்னை, ராமநாதபுரம், கன்னியாகுமரி உட்பட 5 இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதாகி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஜா மொய்தீன் கூட்டாளிகள் தான், பெங்களூரு குண்டுவெடிப்பில் தேடப்படும் குற்றவாளிகள் என என்.ஐ.ஏ விற்கு சந்தேகம் வலுத்துள்ளதால், அவரின் கூட்டாளிகளுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்