ரூ.1 கோடி மதிப்புள்ள மனித முடி திருட்டு - பெங்களூருவில் அதிர்ச்சி
பெங்களூருவில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மனித முடி பண்டல்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். வடக்கு பெங்களூருவில் உள்ள லக்ஷ்மிபுரா பகுதியில், வெங்கடசாமி என்பவர் கடை வைத்து, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு முடி ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது கடையில் 27 பைகளில் 830 கிலோ முடி சேகரித்து வைத்திருந்த நிலையில், 6 பேர் கொண்ட மர்ம கும்பல், கடையில் இருந்த முடி பண்டல்கள் அனைத்தையும் திருடிக் கொண்டு காரில் சென்றுள்ளனர். இதுகுறித்து வெங்கடசாமி அளித்த புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
