பெங்களூருவில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி அரசு விரைவுப் பேருந்து வந்து கொண்டிருந்த போது, ஆம்பூர் அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மான் ஒன்று, பேருந்தில் அடிபட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த அந்த மானை ஓட்டுநரே பேருந்தில் ஏற்றிக்கொண்டு வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த மானை 83 கிமீ தொலைவிற்கு வேகமாக ஓட்டி வந்து வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடியில் ராணிப்பேட்டை வனச்சரகர் கந்தசாமியிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து, உடனடியாக மானுக்கு சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றிய வனத்துறையினர், அமிர்த்தி காப்புக்காட்டிற்கு எடுத்து சென்றனர். அரசு பேருந்து ஓட்டுனரின், இந்த துரிதமான செயலால், உயிருக்கு போராடிய மான் மறுவாழ்வு பெற்றுள்ளது.