பெங்களூரு மெட்ரோவில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை? - வெளியான அதிர்ச்சி வீடியோ

x

பெங்களூரு மெட்ரோவில்.. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர், பெண் பயணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி பெண் ஒருவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பயணிகள் முன்பு... அந்த பாதுகாப்பு ஊழியர், பாலியல் ரீதியாக அருவருத்தக்க வகையில் நடந்து கொண்டதாகவும், அதனை வீடியோ ஆதாரத்துடன் பெங்களூரு மெட்ரோ நிர்வாகத்திடம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லையெனவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார். இந்த பதிவு வைரலான நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்