வங்கியில் வேலை.. வெளியான அறிவிப்பு.. இளைஞர்கள் கவனத்திற்கு

நாடு முழுவதும் உள்ள கிராமப்புற வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி கிராமப்புற வங்கிகளில் உள்ள Clerk எனப்படும் உதவியாளர் பணிகளும், Assistant Manager எனப்படும் துணை மேலாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஜூன் 27-ஆம் தேதிக்குள் I.B.P.S. இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும், வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான முதனிலை தேர்வு ஆகஸ்ட் மாதமும், முதன்மை தேர்வு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com