Bank Robbery | வங்கிக்குள் புகுந்து 5 நிமிடத்தில் 14 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்ற கும்பல் - அதிர்ச்சி வீடியோ
மத்திய பிரதேசம் மாநிலத்தில் வங்கியில் துப்பாக்கி முனையில் 14 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜபல்பூரில் உள்ள கிடோலா பகுதியில் அமைந்துள்ள சிறு நிதி வங்கிக்குள் ஹெல்மெட் அணிந்தபடி புகுந்த கொள்ளையர்கள் ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்த லாக்கர் சாவியை பறித்துள்ளனர். பின்னர் லாக்கரை திறந்து அதிலிருந்த 14.8 கிலோ தங்கம் மற்றும் ஐந்தரை லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பியுள்ளனர்.. வெறும் 5 நிமிடங்களுக்குள் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை பிடிக்க காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
Next Story
