Bank | புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் - உங்க பேங்க்ல எப்படி இருக்கு? செக் பண்ணி பாத்தீங்களா?

x

காசோலைகளை ஒரே நாளில் பணமாக்கும் புதிய நடைமுறையில் சில சிக்கல்கள் இருந்தாலும், அவை தீர்க்கப்பட்டு வருவதாக, N.P.C.I. எனப்படும் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் காசோலைகளை, அது எந்த வங்கியின் காசோலையாக இருந்தாலும் ஒரே நாளில் பணமாக்கும் புதிய நடைமுறையை கடந்த 4ம் தேதி முதல் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில், இதுவரை மத்திய அமைப்பு மூலம் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள 2 கோடியே 56 லட்சம் காசோலைகள் பணமாக்குவதை எளிதாக்கியுள்ளதாக N.P.C.I. குறிப்பிட்டுள்ளது.

பெரும்பாலான சிக்கல்கள் தீர்க்கப்பட்டாலும் மத்திய அமைப்பு மற்றும் சில வங்கிகளில் உள்ள செயல்முறைகளில் சில சிக்கல்கள் தொடர்ந்து காணப்படுவதாகவும், சுமூகமான காசோலை தீர்வு அனுபவத்தை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக N.P.C.I. தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்