வங்கி ஊழியரை பிடித்து சரமாரி உதை.. ராஜ்தாக்கரே கட்சியினரால் மகாராஷ்டிராவில் பரபரப்பு
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள வங்கியில் நவநிர்மாண் சேனா கட்சித் தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டு, வங்கி ஊழியரை தாக்கிய காட்சிகள் வேகமாக பரவி வருகிறது.
நாக்பூர் மவுன்ட்ரோடில் செயல்படும் ஒரு வங்கியில், இந்திரஜித் பலிராம் முலே என்பவர் கடன் பெற்று ஜே.சி.பி இயந்திரம் வாங்கியுள்ளார். இவர் கடனை திரும்பச் செலுத்த தவறியதால், அந்த இயந்திரத்தை வங்கி பறிமுதல் செய்து ஏலம் விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த நபர், இதுதொடர்பாக நவநிர்மாண் சேனா உதவியை நாடியுள்ளார். இதையடுத்து வங்கிக்குச் சென்று வன்முறையில் இறங்கிய ராஜ்தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியினர், வங்கி வளாகத்தை சேதப்படுத்தி ஊழியரை தாக்கியதால் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியினர் சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
