பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய ஆண்...அதிரடி காட்டிய போலீஸ்

x

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த அக்‌ஷிதா ரவிகுமார் என்பவர் சாம்ராஜ்பேட்டை அருகே தனது காரை ஓட்டிச் சென்றார். அப்போது, சாலையில் சென்ற மற்றொரு கார் போக்குவரத்து விதிகளை மீறி சென்றது. இதைக் கவனித்த அக்‌ஷிதா அந்த வாகன ஓட்டுனரை நிறுத்தி, அவர் தவறாக காரை ஓட்டுவதை சுட்டிக்காட்டினார். இதனால் கோபமடைந்த கார் ஓட்டுநர், அக்‌ஷிதாவை மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை வீடியோ எடுக்க அக்‌ஷிதா முயன்றபோது, அந்த ஓட்டுநர் ஆபாசமாக சைகை காட்டியபடி சென்றுள்ளார். இது குறித்து அக்‌ஷிதா போலீசில் புகாரளித்த நிலையில், போலீசார் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்