Bangladesh Violence | பிரச்சாரத்தில் வெடித்த வன்முறை.. வேட்பாளருக்கு துப்பாக்கிச் சூடு..!
வங்க தேச தேர்தல் பிரசாரத்தில் வன்முறை வங்க தேச நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் வன்முறை ஏற்பட்டதால் நாடு முழுவதும் பதற்றம் நிலவுகிறது. வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ளது. இதையொட்டி வங்கதேச தேசிய கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரசாரத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக சிட்டகாங்கில், வங்கதேச தேசிய கட்சி வேட்பாளர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர மற்றொரு வேட்பாளரின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்முறை தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக வங்கதேச இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
Next Story
