பெங்களூருவில் 144 தடையை மீறி மாணவர்கள் நூதன போராட்டம்

144 தடை உத்தரவை மீறி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, கல்லூரி மாணவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டது, நாடு முழுதுவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
பெங்களூருவில் 144 தடையை மீறி மாணவர்கள் நூதன போராட்டம்
Published on

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்நிலையில், கர்நாடகாவில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், கல்லூரி வாயில் முன்பு, மாணவர்கள் தங்களது காலணிகளை கழற்றிவிட்டு, கதவை அடைத்தனர். நுழைவாயில் கதவுக்கு உள்ளே கல்லூரி மாணவர்களும், நடுவே காலணிகளும், அதன் பின்புறம் போலீசாரும் இருந்தனர். மாணவர்கள் நடத்திய இந்த நூதன போராட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com