பாடகரை பண மழையில் நனைத்த காங்கிரஸ் பிரமுகர்

பிரபல இஸ்லாமிய பாடகர் ஜீஷான் ஃபெய்ஸன் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சஃபியுல்லா, பாடகர் மீது ரூபாய் நோட்டு வீசி எறிந்து பண மழையில் நனைத்தார்.
பாடகரை பண மழையில் நனைத்த காங்கிரஸ் பிரமுகர்
Published on

கர்நாடக மாநிலம் சிக்பல்லாபூர் மாவட்டத்தின் முருகமல்லா கிராமத்தில் "தர்கா உருஸ்" என்ற இஸ்லாமியர்களுக்கே உரிய திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரபல இஸ்லாமிய பாடகர் ஜீஷான் ஃபெய்ஸன் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சஃபியுல்லா, பாடகர் மீது ரூபாய் நோட்டு வீசி எறிந்து பண மழையில் நனைத்தார். இந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com