Bangalore | Digital Scam | வீடியோ காலில் பல கோடிகளை இழந்த பெண்.. டிஜிட்டல் கைது மோசடி.
வீடியோ காலில் பல கோடிகளை இழந்த பெண்.. டிஜிட்டல் கைது மோசடி.பெங்களூருவில் டிஜிட்டல் கைது என்ற பெயரில் பெண்ணிடம் 31 கோடியே 83 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த 57 வயது பெண்ணை கடந்த ஆண்டில் செல்போன் வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்ட கும்பல், தங்களை சிபிஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். மேலும், அந்தப் பெண்ணிடம் தடை செய்யப்பட்ட பொருள்கள் இருப்பதாகவும், அதில் இருந்து அவரை விடுவிப்பதாகவும் கூறி பல்வேறு தருணங்களில் 31 கோடியே 83 லட்ச ரூபாய் பறித்துள்ளனர்.. அதன்பின்னர் அவர்கள் மோசடி ஆசாமிகள் என தெரியவந்ததால், அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
