கமலுக்கு பெங்களூரு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

x

நடிகர் கமல்ஹாசன், கன்னட மொழியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவிப்பதற்கு பெங்களூரு சிவில் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின் படி, அவர் கன்னட மொழியை அவமதிக்கும் வகையிலோ, அல்லது கன்னட மொழிக்கு எதிராகவோ கருத்து தெரிவிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில், இந்த இடைக்கால தடையை பிறப்பித்த நீதிமன்றம், இறுதி தீர்ப்பு வரும் வரை இந்த தடை தொடரும் என தெரிவித்துள்ளது.

தக் லைஃப் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில், தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என கமல்ஹாசன் பேசியதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தனது கருத்து சரியே என கமல்ஹாசன் கூறி வந்த நிலையில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்