கிடாய் பலி...போஸ்டர் மீது ரத்தம் தெளிப்பு...பாலய்யா ரசிகர்கள் மீது பாய்ந்த வழக்கு
தெலுங்கு நடிகர் பால கிருஷ்ணாவின் டாக்கு மகாராஜ் பட வெளியீட்டின் போது திரையரங்கின் முன்பு கிடாய் வெட்டிய ரசிகர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது...
டாக்கு மகராஜ் 12ம் தேதி ஆந்திரா முழுவதும் திரைக்கு வந்தது. திருப்பதியில் உள்ள தியேட்டரில் பாலய்யா ரசிகர்கள் திரையரங்கின் முன் கிடாய் பலி கொடுத்து சினிமா போஸ்டர் மீது ஆட்டு ரத்தத்தைத் தெளித்தனர்...
இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இந்த நிலையில் பொதுவெளியில் பலர் பார்த்துக் கொண்டிருக்கும் போது விலங்கு ஒன்றை வெட்டிக் கொன்ற கூட்டத்திற்காக சங்கரய்யா, ரமேஷ், சுரேஷ் ரெட்டி, பிரசாத், லோகேஷ் ஆகிய 5 பேர் மீது திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.Kidai Pali...Blood sprayed on poster...Case filed against Balayya fans
Next Story

