உயிரை காத்த வனத்துறை... நன்றி சொன்ன குட்டி யானை

x

உயிரை காத்த வனத்துறை... நன்றி சொன்ன குட்டி யானை

சத்தீஸ்கரில் பள்ளத்தில் விழுந்த தன்னை மீட்ட வனத்துறைக்கு தனது தும்பிக்கையால் நன்றி சொன்ன சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கட் பகுதியில் யானை குட்டி ஒன்று பள்ளத்தில் விழுந்து சிக்கிக்கொண்டது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு மண்ணை தோண்டி பாதை அமைத்து யானை குட்டியை மீட்டனர். இதனைத் தொடர்ந்து குழியில் இருந்து மகிழ்ச்சியுடன் வெளியே வந்த யானை குட்டி வனத்துறைக்கு தனது தும்பிக்கையை உயர்த்தி நன்றி கூறியது. இது தொடர்பான காட்சிகள் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்