பள்ளத்தில் விழுந்த குட்டி யானை; மீட்ட JCBக்கு நன்றி சொன்ன கண்கொள்ளா காட்சி
சத்தீஸ்கர் மாநிலத்தில், பள்ளத்தில் தவறி விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். ராய்கர் வனப்பகுதியில் உள்ள பள்ளம் ஒன்றில் தவறி விழுந்த குட்டி யானை ஒன்று பல மணிநேரமாக சிக்கித்தவித்தது. இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு சென்ற வனத்துறையினர், ஜே.சி.பி. உதவியுடன் குட்டி யானையை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து வெளியே வந்த குட்டி யானை, நன்றி தெரிவிப்பதுபோல் ஜே.சி.பி.யை தனது துதிக்கையால் தொட்டபின் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Next Story
