சேற்றில் தடுமாறி விழுந்த தாய் யானை : தாயை கண்டு கதறிய குட்டி

கர்நாடக மாநிலம், கடகரஹள்ளி கிராமத்தில், சேற்றில் சிக்கிய யானையை வனத்துறை அதிகாரிகள் போராடி மீட்டனர்.
சேற்றில் தடுமாறி விழுந்த தாய் யானை : தாயை கண்டு கதறிய குட்டி
Published on
கர்நாடக மாநிலம், கடகரஹள்ளி கிராமத்தில், சேற்றில் சிக்கிய யானையை வனத்துறை அதிகாரிகள் போராடி மீட்டனர். ஹாசன் மாவட்டம், கடகரஹள்ளி கிராமத்தில் எத்தினேஹோளே திட்டத்திற்காக ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இந்நிலையில் தண்ணீர் தேடி குட்டியுடன் வனப்பகுதியிலிருந்து வந்த தாய் யானை, சேறும் சகதியுமாக இருந்த பள்ளத்தில் கால் இடறி விழுந்தது. தாய் யானை விழுந்ததை பார்த்த குட்டி யானை அங்கும் இங்குமாக ஓடியது. இதைக் கண்ட கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து கிரேன் மூலம், தாய் யானையை மீட்டனர். தாய் யானைக்கு படுகாயம் ஏற்பட்டதால், வனத்துறையினர் பாதுகாப்பில் தீவிர சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com