அயோத்தியில் அகழ்வாராய்ச்சியின் போது மீட்கப்பட்ட கலைப் பொருட்களை பாதுகாக்க கோரிய வழக்கு: மனுதாரர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் - உச்சநீதிமன்றம்

அயோத்தியில் அகழ்வாராய்ச்சியின் போது மீட்கப்பட்ட கலைப் பொருட்களை பாதுகாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், மனுதாரர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் அகழ்வாராய்ச்சியின் போது மீட்கப்பட்ட கலைப் பொருட்களை பாதுகாக்க கோரிய வழக்கு: மனுதாரர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் - உச்சநீதிமன்றம்
Published on

அயோத்தியில் அகழ்வாராய்ச்சியின் போது மீட்கப்பட்ட கலைப் பொருட்களை பாதுகாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், மனுதாரர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மனுதாரர்கள் சதீஷ் சம்பர்கர், அம்பேத்கர் போதிகுஞ்ஜா தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், எவ்விதமான அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக கேள்வி எழுப்பியதுடன், அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கடைபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க மாட்டார்களா என கேள்வி எழுப்பினர். மனுதாரர்களுக்கு தலா ஒரு லட்சம் அபராதம் விதித்த நீதிபதிகள், அதை ஒரு மாதத்திற்குள் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com