ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை - முதலாமாண்டு விழா.. ஏராளமான பக்தர்கள் வழிபாடு | Ayodhya Ramar temple
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவையொட்டி கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்களும், கூட்டம் கூட்டமாக பக்திப்பாடல்களைப் பாடியபடி ராமர் கோயிலுக்கு வரத் தொடங்கியுள்ளனர். பக்தர்கள் வரிசையாக செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story
