"அயோத்தியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் - உளவுத்துறை எச்சரிக்கை"

உ. பி முழுவதும் பலத்த பாதுகாப்பு - தீவிர கண்காணிப்பு
"அயோத்தியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் - உளவுத்துறை எச்சரிக்கை"
Published on

அயோத்தியில், தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் 7 பேர் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நேபாளம் எல்லை வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் 7 பேரும் உத்தரபிரதேச மாநிலத்திற்குள் நுழைந்து, கோரக்பூர், அயோத்தி ஆகிய மாவட்டங்களில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை கூறியுள்ளது. இதில், 5 தீவிரவாதிகள் அடையாளம் தெரிய வந்துள்ளதாக கூறிய உளவுத்துறை, இவர்கள் முகமது யாகூப், அபுஹம்சா, முகமது ஷாபாஸ், நிஷார் அகமது, முகமது கவுமி சவுத்ரி என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அயோத்தி வழக்கில், வரும் 17 ம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாக இருப்பதால், தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள், ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. எனவே, அயோத்தி மற்றும் முக்கிய பகுதிகளில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் உத்தரபிரதேச மாநிலம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com