Ayodhya Ram Mandir | Modi | அயோத்தி ராமர் கோயில் கோபுர உச்சியில் பிரதமர் செய்ய போகும் செயல்

x

ராமர் கோவில் இறுதிகட்ட பணி தீவிரம்- நவ.25ல் கொடியேற்றுகிறார் பிரதமர்

அயோத்தி ராமர் கோயிலில் இறுதிகட்ட கட்டுமான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பிரசித்தி பெற்ற அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு கடந்த ஆண்டு ஜனவரியில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து கோயிலில் எஞ்சியிருந்த கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

இதனிடையே, கர்ப்ப கிரகத்தின் முதல் தளத்தில் ராம் தர்பார், உச்சியில் கோபுர கலச பணிகள் நிறைவு பெற்ற நிலையில்,

முழு கட்டுமானத்தையும் இம்மாதம் 31-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

அந்த வகையில், அடுத்த மாதம் 25-ஆம் தேதி கோபுர உச்சியில் காவி கொடியை பிரதமர் மோடி ஏற்றிவைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

161 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் உச்சியில் அமையவுள்ள 42 அடி உயர கம்பத்தில் கொடியேற்றப்படவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்