ஹிந்தியில் பேசிய ஆட்டோ ஓட்டுநர் - மன்னிப்பு கேட்க வைத்த அதிர்ச்சி வீடியோ
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஹிந்தியில் பேசிய ஆட்டோ ஓட்டுநரை உத்தவ் சிவசேனா , எம்.என்.எஸ் கட்சியினர் தாக்கிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் விரார் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மராத்தி மொழியில் பேசாமல் ஹிந்தி மொழியில் பேசியுள்ளார். இதனால் மராத்தி மொழியை அவமதித்துவிட்டதாக கூறி உத்தவ் சிவசேனா மற்றும் எம்.என்.எஸ் கட்சியின் தொண்டர்கள் இணைந்து ஆட்டோ ஓட்டுநரை தாக்கி கன்னத்தில் அறைந்து , மன்னிப்பும் கேட்க வைத்தனர். கடந்த வாரம் இதேபோன்று ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை கன்னத்தில் அறைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது அதேபோன்ற சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது.
Next Story
