Autism | SCI | Stem Therapy | "இனி கூடாது.." - ஆட்டிஸம் சிகிச்சையில் அதிரடி காட்டிய நீதிமன்றம்
"இனி கூடாது.." - ஆட்டிஸம் சிகிச்சையில் அதிரடி காட்டிய நீதிமன்றம்
ஆட்டிஸத்துக்கு ஸ்டெம் செல் தெராபி கூடாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஆட்டிஸம் சிகிச்சைக்காக ஸ்டெம் செல் தெராபியை பயன்படுத்தக் கூடாது என்றும், கிளினிக்கல் ஆய்வுகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மும்பையை சேர்ந்த யாஷ் தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தவறான மருத்துவ சிகிச்சைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
